Skip to content

Popular

அத்தியாயம் 101 · Surah Al-Qaari'a

القارعة

திடுக்கிடசெய்யும் நிகழ்ச்சி

The Calamity

11 வசனங்கள் மக்கீ (மக்காவில் அருளப்பட்டது)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡقَارِعَةُ 1

    1. (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!

  2. مَا ٱلۡقَارِعَةُ 2

    2. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?

  3. وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ 3

    3. (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?

  4. يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ 4

    4. அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.

  5. وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ 5

    5. கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.

  6. فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ 6

    6. எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,

  7. فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ 7

    7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.

  8. وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ 8

    8. எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,

  9. فَأُمُّهُۥ هَاوِيَةٞ 9

    9. அவன் தங்குமிடம் ஹாவியாதான்.

  10. وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ 10

    10. அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?

  11. نَارٌ حَامِيَةُۢ 11

    11. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.

114 அத்தியாயங்கள் · All surahs ›

அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.