அத்தியாயம் 10 · Surah Yunus · வசனம் 32
யூனுஸ் 10:32 · Quran 10:32 in Tamil
فَذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمُ ٱلۡحَقُّۖ فَمَاذَا بَعۡدَ ٱلۡحَقِّ إِلَّا ٱلضَّلَٰلُۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ
32. ‘‘அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) அளவு உண்மை விவரிக்கப்பட்ட பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?'' (என்றும் நபியே! கேட்பீராக).
யூனுஸ் – முழு அத்தியாயம் › அடுத்த வசனம் 10:33 ›
அடுத்த வசனங்கள் · Next ayahs
- 10:33 · 33. (அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில் ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உமது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது.
- 10:34 · 34. (அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்...
- 10:35 · 35. (‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்...
- 10:36 · 36. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே தவிர வேறொன்றையும் பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சய...
அரபி உரையும் தமிழாக்கமும்: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு – QuranEnc.com (Tamil Translation - Abdulhamid Baqawi, பதிப்பு 1.0.1). எந்த மாற்றமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் குறை கண்டால் QuranEnc.com தளத்துக்குத் தெரிவிக்கவும். அத்தியாய விவரங்கள்: Tanzil.net; தமிழ் அத்தியாயப் பெயர்கள்: தமிழ் விக்கிமூலம் (CC BY-SA 4.0). இப்பக்கங்களில் விளம்பரங்கள் இல்லை.