திசம்பர் 2
வரலாற்று நிகழ்வுகள்
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் லூயி-நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் இரண்டாம் குடியரசைக் கலைத்தார்.
Events
1851
திசம்பர் 2
1851
திசம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 986 பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 987 இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1214 பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது. சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1223 இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1259 பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1260 சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1269 பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார். சூன் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1349 பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 2 அன்று மேலும்
- 1409 லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1547 எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய தேடலறிஞர் (பி. 1485) இறப்புகள்
- 1594 கிரார்துசு மெர்காதோர், பிளெமிய கணிதவியலாளர், நிலப்படவரைவாளர் (பி. 1512) இறப்புகள்
- 1697 இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1804 நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1805 நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1823 அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1843 யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.