வழிபாட்டு முறைகள்

வியாசர் அருளிய. ஸ்ரீ குரு பகவான் ஸ்தோத்ரம் (நவக்கிரக ஸ்தோத்திரம்)

வழிபாட்டு முறைகள்

வியாசர் அருளிய.
ஸ்ரீ குரு பகவான் ஸ்தோத்ரம்
(நவக்கிரக ஸ்தோத்திரம்)

தேவர்களும் முனிவர்களும் சேவிக்கும் சுரகுருவை
மேவுசுடர்ப் பொன்போன்று மிகவும் ஒளிர்பவனை,
மூவுலகும் வணங்குகின்ற மூர்த்தியினை, ஈஸ்வரனை
யாவுமிக அறிந்தவனை யான்வணங்கிப் போற்றுகிறேன்.

தேவர்கள்,முனிவர்கள்,எல்லோராலும் வணங்கப்பெறுபவனும்
ஒளிவீசும் பொன்னைப் போல் காந்திஉடையவனும்

மூன்று உலகங்களும் போற்றிப் பணியும் வடிவுடையவனும்
எல்லாம் அறிந்தவனும் ஈசன் எனப் புகழப்படுபவனும்
தேவர்களின் குருவும்ஆன வியாழ பகவானை நான் வணங்குகிறேன்.

குரு ஸ்லோகம்-

குரு பிரஹ்மா குரு விஸ்ணு குரு தேவோ மகேச்வர:
குரு சாஷாத் பரப்ரஹ்மை தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ.

தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஷ்பதிம்.

என்னும் ஸ்லோகத்தை 12 முறை சொல்லி வணங்கினால்,
குருவால் ஏற்படும் சிரமங்கள் குறையும்.

குரு காயத்ரி

ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.

உத்தமனே! உயர்ந்தவனே!
தத்துவத்தின் நாயகனே ! சித்தனே!
புத்திரருக்கு அதிபதியே! பொன் மகனே!
நித்தம் உன்னைப் பணிவேன்- பக்தியுடன்
பதம் பணிவேன் பிரகஸ்பதியே போற்றி! போற்றி!!

வானவர்க்கரசே! வளம் தரும் குருவே!
காணா இன்பம் காண வைப்பவனே!
பொன்னிற முல்லையும் புஷ்பராகமும்
உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!
சுண்டல் தானியமும் சுவர்ண அபிஷேகமும்
கொண்டுனை வழிப்படக் குறைகளைத் தீர்ப்பாய்!
தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்
நிலையாய்த் தந்திட நேரினில் வருக!

வியாழன் துதி

குணமிகு வியாழ குருபகவானே!
மணமுள வாழ்வை மகிழ்வுடன் அருள்வாய்!
பிரகஸ்பதி வியாழ பர குரு நேசா!
கிரக தோஷமின்றிக் கடாட்சித் தருள்வாய்!

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.

வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி!