இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(13-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(13-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-வியாழகிழமை(13-01-2022)

இன்றைய பஞ்சாங்கம்

பிலவ ஆண்டு – மார்கழி 29 -1, வியாழக்கிழமை (13.01.2022)

2,நட்சத்திரம் : கார்த்திகை
 இரவு 7.37 வரை பின்னர் ரோஹிணி

3,திதி : ஏகாதசி இரவு 9.56 வரை பின்னர் துவாதசி

4,யோகம் : மரண யோகம்

5,கரணம் : பத்திரை இரவு 09:57வரை 

நல்லநேரம் : காலை : 10.30 - 11.30

வியாழக்கிழமை 
சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

 போகிப் பண்டிகை
வைகுண்ட ஏகாதசி
கார்த்திகை விரதம்

நல்ல நேரம்
10:30 - 11:30 கா / AM
00:00 - 00:00 மா / PM
கௌரி நல்ல நேரம்
12:30 - 01:30 கா / AM
06:30 - 07:30 மா / PM

இராகு காலம்
01.32 - 03.02
எமகண்டம்
06.04 - 07.34
குளிகை
09.01- 10.31

சூலம்:தெற்கு=பரிகாரம்
தைலம்

சந்திராஷ்டமம்
சித்திரை சுவாதி

கீழ் நோக்கு நாள்

சூரிய உதயம்
06:34 காலை

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் வரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

மகரம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. நிம்மதி உண்டாகும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.