இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(11-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(11-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-செவ்வாய்கிழமை(11-01-2022)

இன்றைய பஞ்சாங்கம்

பிலவ ஆண்டு – மார்கழி 27 - #செவ்வாய்கிழமை (11.01.2022)

#நட்சத்திரம்: அஸ்வினி பகல் 3.19 வரை பின்னர் பரணி

#திதி : நவமி மாலை 6.28 வரை பின்னர் தசமி

#யோகம் : சித்த யோகம்

#கரணம் :கௌலவம் மாலை 06:28 வரை பின்பு தைதுலம்

நல்லநேரம் : காலை 7.30 - 8.30 / மாலை 4.30 - 5.30

#செவ்வாய்க்கிழமை - 
சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை

நல்ல நேரம்
07:30 - 08:30 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
01:30 - 02:30 கா / AM
07:30 - 08:30 மா / PM

இராகு காலம்: 03.03 - 04.33

எமகண்டம்: 09.05 - 10.35

குளிகை:12.07 - 01.37

சூலம்: வடக்கு=பரிகாரம்
பால்

#சந்திராஷ்டமம்
உத்திரம்+அஸ்தம்

 சம நோக்கு நாள்

சூரிய உதயம்
 06:33 கா / AM

சுபகாரியம்
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். நட்பால் சில விரையம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் வரும். ஆன்மீக ஆர்வம் கூடும். பயனற்ற விஷயங்களில் கவனத்தை சிதற விட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, குடும்ப நபர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். அனாவசிய செலவுகளை குறைக்கவும். பெண்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பதவிகள் கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நேயர்களே, உறவினர்களால் நன்மை உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உடல் ஆரோக்கியம் பெறும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

சிம்மம் 

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தை பற்றிய சிந்தனை இருக்கும். மனதில், தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். கோர்ட் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

கன்னி

கன்னி ராசி நேயர்களே, நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பை பெற முடியும். சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சந்திராஷ்டமம் இருப்பதால் மன சஞ்சலம் இருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் வந்துசேரும் சற்று கவனம்

துலாம்

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பால்ய நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களே, அண்டை அயலார் உதவி கிடைக்கும். மற்றவர்களுடனான மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மகரம்

மகர நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் பொறுமையை கடைபிடிக்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, தீராத பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். பெற்றோரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மீனம்

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.