இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(05-01-2022)

இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(05-01-2022)

இன்றைய நாள்  பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(05-01-2022)

05-01-2022, மார்கழி 21, புதன்கிழமை,

திரிதியைதிதி பகல் 02.35 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. திருவோணம் நட்சத்திரம் காலை 08.46 வரை பின்புஅவிட்டம்.

சித்தயோகம் காலை 08.46 வரை பின்புபிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2.

சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்றநாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 - 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

இன்றைய ராசிப்பலன் -  05.01.2022

மேஷம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாகஅமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள்கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால்அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள்வந்து சேரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்துசென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்செய்யும் செயல்களில் தடைகள் ஏற்படக்கூடும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடுசெய்யாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில்மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம்தேவை.

கடகம்

இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன்செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய நபரின்அறிமுகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்குஉழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சேமிப்புஉயரும்.

சிம்மம்

இன்று பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர்பயணம் செல்ல நேரிடும். சுபமுயற்சிகளில்அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில்புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்தமந்த நிலை நீங்கி புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிடநேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம்அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால்உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாகஅமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தொழில் ரீதியாக பயணங்களால் அலைச்சல்அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின்ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

இன்று தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள்அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம்குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின்நட்பு கிடைக்கும். குடும்பத்தில் கணவன்மனைவியிடையே இருந்த மனசங்கடங்கள் மறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

தனுசு

இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்றுஅதிகரிக்கலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறைசிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில்வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்துநிம்மதி ஏற்படும்.

மகரம்

இன்று இல்லத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்றுமகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருள் வாங்குவதில்ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான கொடுக்கல்வாங்கலில் லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள்வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில்சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நினைத்த காரியம் நிறைவேற எதிலும் சற்றுபொறுமையுடன் இருப்பது நல்லது. நண்பர்களால்எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள்உண்டாகும்.

மீனம்

இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன்ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம்கிடைக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவேண்டியதொகை கைக்கு வந்து சேரும்.