பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எஸ். வி. ரமணன்
ஆண் : வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
வானம் பாடி கானம் பாடி
காதல் சுவையை தந்தாளோ
ஆண் : வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
ஆண் : ஈர விழியின் ஓர அசைவில்
இன்பம் ஒரு கோடி
ஈர விழியின் ஓர அசைவில்
இன்பம் ஒரு கோடி
அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின்
அலைகள் கவி பாடி ஹா
பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம்
இரவில் உருவாகும்
பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம்
இரவில் உருவாகும்
உன் அசைவில் தோன்றும் புதிய தாளம்
என்னுள் சதிராடும்
ஆண் : நான் தொட்டதும்……போதுமோ…
என் ஆசைகள்……நிறைவேறுமா…
ஆண் : வானில் வாழும் தேவதை
என் நேரில் வந்தாளோ
பெண் : இளமை இதழின் இனிய மதுவை
பருக வரும் வண்டு
இளமை இதழின் இனிய மதுவை
பருக வரும் வண்டு
அதன் வளமை கண்டு மயங்கி நின்று
மறந்த கதை உண்டு
ஆண் : கடலின் நடுவில் தாகம் வந்தால்
தீர வழி ஏது
கடலின் நடுவில் தாகம் வந்தால்
தீர வழி ஏது
இந்த உடலின் மீது மோகம் பிறந்தால்
மீள வழி ஏது
பெண் : நீ தொட்டதும்…….போதுமோ…
என் ஆசைகள்……நிறைவேறுமா……
பெண் : வானில் வாழும் தேவன் எந்தன்
நேரில் வந்தானோ
வானம் பாடி கானம் பாடி
காதல் சுவையை தந்தாளோ
ஆண் : வானில் வாழும் தேவதை……
எந்தன்…….நேரில் வந்தாளோ…