மாடித்தோட்டத்தில் சம்பங்கி பயிரிடும் முறை

Jul 25, 2023 - 00:00
 0  76
மாடித்தோட்டத்தில் சம்பங்கி பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் சம்பங்கி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • Grow Bags அல்லது Thotti.
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
  • விதைக்கரணைகள்
  • நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை சம அளவு கலந்து வைக்க வேண்டும்.

செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும்.

விதைத்தல்

விதைக்கரணைகளை பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். அகலமானதாக இருந்தால் இரு கரணைகள் வரை நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

தென்னை நார்க்கழிவு இருப்பதால் ஈரப்பதத்தை கண்காணித்து நீர் ஊற்ற வேண்டும். பைகளின் அடியில் துளை இடுவதால் அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறிவிடும்.

உரங்கள்

வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.

பாதுகாப்பு முறைகள்

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.

பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

பயன்படுத்தும் இடங்கள்

இதன் தொட்டிகளுக்கு வண்ணங்கள் பூசினால் அழகாக இருக்கும். இதை முன் வரவேற்பறை அல்லது வாசலின் பக்கவாட்டில் வைக்கலாம்.

இது அந்திமாலை நேரத்தில் மலர்வதால் இதன் வாசனையானது இரவு முழுவதும் இருக்கும்.

சம்பங்கி பயன்கள்
  • சம்பங்கி பூக்களை பயன்படுத்தி மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி, தூக்கமின்மைக்கான தேனீர் தயாரிக்கலாம்.
  • காய்ச்சிய பசும்பாலில் சம்பங்கி பூவை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். அஜீரணம், செரிமானக் கோளாறு ஆகியவை நீங்கும்.
  • பூக்களை தேனீராக்கி குடிப்பதன் மூலம் வயிற்று வலி, பால்வினை நோய், காய்ச்சல், தலைவலி சரியாகும். வயிற்று கடுப்பை போக்க கூடியது.
  • சம்பங்கி இலைகளை பயன்படுத்தி தைலம் தயாரிக்கலாம். இவற்றை தலையில் தேய்த்து குளிப்பதால் பொடுகு தொல்லை குறைவதோடு முடி நன்கு வளரும்.
  • சம்பங்கி பூவை கூந்தலுக்கு சூடுவதால் மனம் இதமாகிறது. சம்பங்கி பூக்கள் தோல் நோய்களால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த கூடியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow