அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

 0  59
அகத்தி மரம் வளர்ப்பு முறை மற்றும் பயன்கள்

மரத்தின் பெயர் : அகத்திமரம்

தாவரவியல் பெயர்: செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா

ஆங்கில பெயர் : Vegetable Hummingbird, Hummingbird tree

மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரங்கள்

வாழிடம்: வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

வளரியல்பு : இலையுதிர் மரமாகும்.

பொதுப்பண்புகள் :

அகத்தி வளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும். வெற்றிலைக் கொடி மற்றும் மிளகுக் கொடிகள் படர்வதற்காக வளர்க்கப்படும் சிறு லேசான மரவகை. இதற்குக் கிளைகள் கிடையாது.

அகத்தி மரம் குறுகிய காலம் மட்டுமே வாழக்கூடிய வேகமாக வளரக்கூடிய மரமாகும்.

நேராக சுமார் 25 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும்.

மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.

இலைகள் 15 – 30 செ.மீ. நீளம் உடையது.

ஒரு இலையில் 40 – 80 சிறு இணுக்குகள் இருக்கும். ஒரு இணுக்கு 1.5 – 3.5 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் இலை, பூக்கள் சமையலுக்குக் கீரையாகப் பயன்படுத்துவார்கள்.

இலைகள் இளமையில் அடர் பச்சை நிறமுடையது, முதிர்ந்தபின் மஞ்சள் நிறமாக மாற்றமடைகிறது.

இதன் பூக்கள் சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும். இவை முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதரும்.

விதை 8 மி.மீ. நீளத்தில் இருக்கும். அகத்தியின் தாயகம் மலேசியா.

பின் வட ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. அகத்தி வெப்ப மண்டலத்தில் வளரக் கூடியது. பனிப் பிரதேசத்தில் வளராது. அகத்தி விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மரப்பண்பு:

இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.

வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

இம்மரம் மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

சாதகமான சூழல் நிலைமைகள்:

மழை

அதிகம் (1500mm விட அதிகமாக),நடுத்தரம் (700 – 1500 மிமீ இடையே)

வெப்பநிலை

40 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

மண்

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH

6.5 – 7.5

உயரம்

800 மீ வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு

சமவெளிப்பகுதி,கடற்கரை சமவெளிப்பகுதி

மரம் வளர்ப்பு வழிமுறைகள்

இயற்கை மறு உருவாக்கம்

சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

செயற்கை மறு உருவாக்கம்

நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

விதை சேகரிப்பு

பழுத்த நெற்றானது ஏப்ரல் – மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.

நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.

ஒரு கிலோ விதையில் 15000 – 16000 விதைகளிருக்கும்.

விதைகள் ஒரு வருடம் வரை முளைப்புத்தன்மையை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.

விதை முளைப்புத்திறன் 80 ; 90 சதிவிகிதமாகும்.

விதை சிகிச்சை

தேவையில்லை.

நாற்றங்கால் தொழில்நுட்பம்

பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைக்கப்பட வேண்டும்.

பாலித்தீன் பையானது மணல் மற்றும் எரு அடங்கிய வளர் இடுபொருட்கள் நிறப்பப்படுகிறது.

3 – 5 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.

விதை முளைத்தபின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்படுகிறது.

3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் விதைக்கப்பட வேண்டும்.

பாலித்தீன் பையானது மணல் மற்றும் எரு அடங்கிய வளர் இடுபொருட்கள் நிறப்பப்படுகிறது.

3 – 5 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.

விதை முளைத்தபின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்படுகிறது.

3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம்

நேரடி விதைப்பு:

1.8 மீ இடைவெளியில் 30 செ.மீ ஆழத்தில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.

பருவ மழை சமயத்தில் 1.8 x 1.8 x 1.8 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :

3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.

பருவ மழை சமயத்தில் 1.2 x 1.2 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

குழிகள் மழை பொழிவுக்கு முன்னதாக எடுக்க்ப்பட வேண்டும்.

பராமரிப்பு/நோய்

களையெடுத்தல் மற்றும் மண் உழுதல் அவசியமாகும்.

மகசூல்

ஒரு வருடத்திற்கு ஒரு மரத்தில் 4 ; 9 கிலோ கீரை மகசூலாக கிடைக்கும். * இடத்திற்கேற்ப மகசூல் மாறுபடுகிறது

பரிந்துரைக்கப்பட்ட அறுவடை

விதைக்கப்பட்டதிலிருந்து 8 மாதங்களில் முதல் அறுவடை செய்யப்படுகிறது. அதன் பின் 60 ; 80 நாட்களுக்கு ஒரு முறை இதன் இலைகள் கீரைக்காக அறுவடை செய்யப்படுகிறது.

ஊடுபயிர்

வெண்ணிலா, மிளகு போன்றவை வளர ஊடு பயிராகவும் பயன்படுகிறது.

வெற்றிலை மற்றும் தீவனப் பயிர்களை ஊடு பயிரிடலாம்.

சந்தை விவரங்கள்

ஒரு டன் மரம் 2300 ; 2600 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. * சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

பயன்கள் :

அகத்தி கோழி, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

அகத்தியின் பட்டையும் வேரும் மருந்துப்பொருள்களாகப் பயன்படுகிறது. அகத்தி மரக்குச்சிகள் கூரை வேய்வதற்குப் பயன்படுகிறது.

அகத்தி பட்டையிலிருந்து உரித்தெடுக்கப்படும் ஒரு வகை நார் மீன் பிடி வலைகளுக்குப் பயன்படுகிறது. அகத்திப்பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுகிறது.

அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது.

வெண்மை நிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடிமருந்து செய்யவும் பயன்படுகிறது. அகத்தி கீரை ரத்தத்தைச் சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளிய வைக்கும். அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

பிற பயன்கள்

மரப்பட்டை கசிவு விதையில் இருந்து கோந்து போன்றவை பெறப்படுகிறது. கம் ஆராபிக்கிற்கு மாற்றாக இந்த பசை பயன்படுகிறது.

மரப்பட்டையிலிருந்து டானின் பெறப்படுகிறது.

வெண்மை நிற மரக்கட்டை இலேசாகவும், மென்மையாகவும் உள்ளது. மரக்கட்டையின் அடர்த்தி வயது அதிகரிக்கும போது அதிகரிக்கும்.

இக்கட்டை வீட்டுக் கட்டுமானப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.

நோய் தடுக்கும் முறைகள் :

இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.

அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow