வாழ்க்கையில் கஷ்டங்களை நீக்கி சந்தோஷங்களை தர செய்யவேண்டிய பரிகாரம்.

வாழ்க்கையில் கஷ்டங்களை  நீக்கி சந்தோஷங்களை தர  செய்யவேண்டிய பரிகாரம்.

வாழ்க்கையில் பிறந்ததிலிருந்தே துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், எதிலுமே வெற்றியை பெறாதவர்கள், தடைகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பவர்கள், எவராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை வாழ்க்கையில் ஒரு முறை செய்தால் போதும். இந்த பரிகாரத்தின் பலனை வாழ்நாள் முழுவதும் நாம் அனுபவிக்கலாம். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய சுலபமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வோமா.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து வினைகளைத் தீர்த்து வைக்கும் எளிமையான கடவுள் என்றால் அது விநாயகர்தான். விக்னங்களை தீர்க்கக் கூடிய இந்த விநாயகருக்கு பூஜையில் எப்போதுமே முதலிடம் உண்டு. உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விநாயகர் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

திங்கட்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய தொடங்க வேண்டும். திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் செய்ய வேண்டிய பரிகாரம் இது. திங்கட்கிழமை முதல் நாள் ஒரு தேங்காய். செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாள் இரண்டு தேங்காய். இப்படியாக வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாள் ஐந்து தேங்காய் வரை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

மொத்தமாக 15 தேங்காய்கள் நமக்கு தேவைப்படும். 15 தேங்காய்களை வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள். கட்டாயமாக திங்கட்கிழமையில் தான் இதை நீங்கள் தொடங்க வேண்டும். திங்கட்கிழமை காலை எழுந்து சுத்தமாக குளிக்க வேண்டும். பூஜை அறையில் வாங்கி வைத்திருக்கும் ஒரு தேங்காயை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்ற வேண்டும். இதை பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அர்ச்சகரிடம் கொடுத்து விநாயகரின் பாதங்களில் இந்த தேங்காயை வைத்து அர்ச்சனை செய்துவிட்டு கொண்டு வந்து இந்த தேங்காயை சிதறு தேங்காய் உடைத்து விட்டு விநாயகரை மூன்று முறை வலம் வந்து, தோப்புக்கரணம் போட்டு அதன் பின்பு வீட்டிற்கு வந்து விட வேண்டும்.

செவ்வாய்க்கிழமையும் இதே போல் தான் செய்ய வேண்டும். புதன், வியாழன், வெள்ளி, தொடர்ந்து ஐந்து நாட்களும் இதேபோல்தான் வழிப்பாட்டை செய்ய வேண்டும். ஆனால் உங்களுடைய தேங்காயின் எண்ணிக்கை மட்டும் திங்கட்கிழமை ஒன்று இருந்தது அல்லவா. செவ்வாய்க்கிழமை இரண்டு தேங்காய் எடுத்துச் செல்லுங்கள். புதன்கிழமை 3 தேங்காய் எடுத்துச் செல்லுங்கள். வியாழக்கிழமை 4 தேங்காய் எடுத்துச் செல்லுங்கள். வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாள் இறுதியான நாள் 5 தேங்காயை எடுத்துக் கொண்டு போய் விநாயகருக்கு சூரை உடைத்து விட்டு விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்துவிட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான். ஒரு தேங்காயை முதல் நாள், தலையில் மூன்று முறை சுற்றி விடலாம். இரண்டாவது நாள் மூன்றாவது நாள் என்று படிப்படியாக தேங்காயின் எண்ணிக்கை ஏறும் போது ஒவ்வொரு தேங்காயை எடுத்து மூன்று முறை தலையை சுற்றிக் கொண்டால் போதும். உங்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அத்தனையும் தகர்க்கப்படும். கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உங்களை தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.