இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(30-09-2021)

இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(30-09-2021)

 0  20
இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(30-09-2021)

இன்றையபஞ்சாங்கம்

Date : வியாழன், 30 செப்டம்பர் 2021

சூரிய உதயம் : 06:02
சூரிய அஸ்தமனம் : 17:56

சந்திர உதயாதி நாழிகை : 25:06
சந்திர அஸ்தமனம் : 13:32

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : புரட்டாசி 14

பட்சம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : நவமி - 22:08 வரை

நட்சத்திரத்தன்று : புனர்பூசம் -  25:33 வரை

யோகம் : பரிகம் - 18:53 வரை

முதல் கர்ணன் : சைதுளை - 09:23 வரை
இரண்டாவது கர்ணன் : கரசை - 22:08 வரை

சூரிய அடையாளம் : கன்னி
சந்திரன் அடையாளம் : மிதுனம் - 19:05 வரை

அபிஜித் : 11:35 - 12:23

துர்முஹுர்த்தம்: 10:00 - 10:47
14:45 - 15:33

அமிர்தகாலம் : 22:57 - 24:41

Varjyam : 12:30 - 14:14

ராகுகாலம் : 13:28 - 14:57

குளிகை : 09:00 - 10:29

யமகண்டம் : 06:02 - 07:31

சந்திராஷ்டமம்
கேட்டை+மூலம்

#சுபஹோரைகள்
#காலை
06:00-07:00
09:00-10:00
10:00-11:00
11:00-12:00
#மதியம்
01:00-02:00
#மாலை
04:00-05:00
05:00-06:00
#இரவு 
06:00-07:00
08:00-09:00

இன்றைய_ராசிபலன்

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த சோர்வு, களைப்பு கோபம் யோவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் போராடி லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சிறப்பான நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமை கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பணம் வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் புதிய தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். மகளுக்கு நல்லவரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow