இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(19-10-2021)

இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(19-10-2021)

 0  9
இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(19-10-2021)

இன்றையபஞ்சாங்கம்

Date : செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021

சூரிய உதயம் : 06:03
சூரிய அஸ்தமனம் : 17:44

சந்திர உதய நாழிகை : 17:10
சந்திர அஸ்தமனம் : 29:37

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : ஐப்பசி 2

பட்சம் : சுக்ல பக்ஷம்

திதி : சதுர்தசி - 19:03 வரை

நட்சத்திரத்தன்று : உத்திரட்டாதி - 12:13 வரை

யோகம் : வியாகதம் - 20:39 வரை

முதல் கர்ணன் : கரசை - 06:31 வரை
இரண்டாவது கர்ணன் : வனசை - 19:03 வரை

சூரிய அடையாளம் : துலாம்
சந்திரன் அடையாளம் : மீனம்

அபிஜித் : 11:30 - 12:17

துர்முஹுர்த்தம் : 08:23 - 09:10
22:40 - 23:29

அமிர்தகாலம் : 07:08 - 08:50

Varjyam : 25:07 - 26:51

ராகுகாலம் : 14:49 - 16:17

குளிகை : 11:54 - 13:21

யமகண்டம்: 08:58 - 10:26

#சந்திராஷ்டமம்
மகம்+பூரம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதையும்  சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்

மிதுனம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில்  திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நன்றி மறந்த சிலரை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக நடந்துகொள்வார்கள். அமோகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு

தனுசு: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் நன்மை செய்வார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். அரசால் அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வாதங்களில் வெற்றி பெறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் இருந்த டென்ஷன் கோபம் யாவும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். அரை குறையாக நின்ற வேலைகள் எல்லாம் இனிதே முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நல்லது நடக்கும் நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். உறவினர்கள் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலருக்கு தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow