இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(10-10-2021)

இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(10-10-2021)

இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(10-10-2021)

இன்றையபஞ்சாங்கம்

Date : ஞாயிறு, 10 அக்டோபர் 2021

சூரிய உதயம் : 06:02
சூரிய அஸ்தமனம் : 17:49

சந்திர உதயாதி நாழிகை : 09:38
சந்திர அஸ்தமனம் : 21:21

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : புரட்டாசி 24

பட்சம் : சுக்ல பக்ஷம்

திதி : பஞ்சமி -  26:14 வரை

நட்சத்திரத்தன்று : அனுஷம் - 14:44 வரை

யோகம் : ஆயுஷ்மான் - 15:04 வரை

முதல் கர்ணன் : பவம் - 15:32 வரை
இரண்டாவது கர்ணன் : பாலவம் -  26:14 வரை

சூரிய அடையாளம் : கன்னி
சந்திரன் அடையாளம் : விருச்சிகம்

அபிஜித் : 11:32 - 12:19

துர்முஹுர்த்தம் : 16:15 - 17:02

அமிர்தகாலம் : 28:47 - 30:16

Varjyam : 19:55 - 21:24

ராகுகாலம் : 16:21 - 17:49

குளிகை : 14:53 - 16:21

யமகண்டம் : 11:56 - 13:24

#சந்திராஷ்டமம்
அஸ்வினி+பரணி

ராசிபலன்கள்

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இறுக்கமான மனநிலையில் இருந்து உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருக்கும் பகைவர்களை இனம் கண்டுகொள்ளும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பான பலன்களைக் கொடுக்கக் கூடிய வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் பன்மடங்கு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை நீங்களே புரிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் அமையும். உங்களுடைய திறமை மற்றவர்களுக்கு வெளிக்கொணரும் அற்புத நாளாக இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனம் தேவை. தேவையற்ற நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில், புதிதாக எடுக்கும் ஒப்பந்தங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்ய இருக்கும் செயல்களில் கவனம் தேவை. தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. நீங்கள் இடும் வார்த்தைகள் மூலம் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய சிந்தனைகள் நேர்மறையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளைப் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடி சாதிக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். தொழில் துறையில் இருப்பவர்கள் புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் குறையும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய அணுகுமுறை மற்றவர்களை கவரும் விதமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இடையூறாக இருந்த பல விஷயங்கள் சாதகமாக மாறக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய கனவு நிறைவேற கூடிய அற்புதமான சந்தர்ப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மறையலாம்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. தேவையற்ற வார்த்தைகளை விட்டு விட்டால் பின்னர் அதனை மீட்டு எடுப்பது சிரமம் என்பதை உணர்ந்து செயல்பட்டு நடப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் கூடிய சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கனவுகள் கைகூடி வரும் யோகமுண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத தடைகளை தாண்டிய வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு முயற்சியும் சாதகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் இணக்கம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூல பலன் உண்டாகும். வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வருவது வரட்டும் என்ற உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்துடன் இருப்பது நல்லது.