இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(05-10-2021)

இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(05-10-2021)

இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்கிழமை(05-10-2021)

இன்றையபஞ்சாங்கம்

Date : செவ்வாய், 05 அக்டோபர் 2021

சூரிய உதயம் : 06:02
சூரிய அஸ்தமனம் : 17:53

சந்திர உதயாதி நாழிகை : 29:40
சந்திர அஸ்தமனம்: 17:21

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : புரட்டாசி 19

பட்சம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : சதுர்தசி - 19:04 வரை

நட்சத்திரத்தன்று : உத்தரம் -  25:10 வரை

யோகம் : சுப்பிரம் - 11:35 வரை

முதல் கர்ணன் : பத்திரை - 08:08 வரை
இரண்டாவது கர்ணன் : சகுனி - 19:04 வரை

சூரிய அடையாளம் : கன்னி
சந்திரன் அடையாளம் : சிம்மம் - 08:17 வரை

அபிஜித் : 11:33 - 12:21

துர்முஹுர்த்தம்: 08:24 - 09:11
22:44 - 23:33

அமிர்தகாலம் : 18:24 - 19:54

Varjyam : 09:22 - 10:52

ராகுகாலம் : 14:55 - 16:24

குளிகை : 11:57 - 13:26

யமகண்டம்: 08:59 - 10:28

#சந்திராஷ்டமம்
#சதயம்

#சுபஹோரைகள்
#காலை
08:00-09:00
09:00-10:00
10:00-11:00
#மதியம்
12:00-01:00
#மாலை
03:00-04:00
04:00-05:00
05:00-06:00
#இரவு
07:00-08:00

இன்றைய ராசிபலன்

மேஷம்

மேஷம்: அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு உயரும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதையும் தாங்கும் மன வலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விஜபிகள் அறிமுகவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மதிப்பு கூடும் நாள்.

தனுசு

தனுசு: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில்  உங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: உங்கள் சூழ்நிலையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும். கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.