ஈரல் வறுவல் செய்வது எப்படி?

ஈரல் வறுவல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் 

ஆட்டு ஈரல் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 12
தக்காளி -1
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய்
உப்பு

செய்முறை 

1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்த்து தாளித்ததும், பொடியாக வெட்டிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை   சேர்த்து வதக்கவும்.

2. வெங்காயம் வதங்கியதும் பொடியாக வெட்டிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் பொடி வகைகளை சேர்த்து கிளறவும்.

3. அதனுடன் ஈரலை சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக வதக்கவும்.

4. ஈரல் வதங்கியதும் தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.

5. ஈரல் வெந்து தண்ணீர் வற்றியதும் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் வரை கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான மதுரை ஈரல் வறுவல் தயார்.