வீட்டு வைத்திய குறிப்புகள்!

 0  294
வீட்டு வைத்திய குறிப்புகள்!

1. கர்ப்பமுற்ற பெண்கள் வாயில் ஓமத்தை அடக்கி கொண்டால் வயிற்று புரட்டல், வாந்தி வராது.

2. மாதுளம் பழம், திராட்சை பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம் இவற்றை சளி தொந்தரவு உள்ளவர்கள் குளிர்காலத்தில் சாப்பிடக் கூடாது.

3. குளிப்பதற்கு முன் உடலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டால் தோல் வறண்டு போகாமல் இருக்கும்.

4. மெலிந்த தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வேளை கேழ்வரகு கஞ்சி சாப்பிட்டுவர உடல் தேறும்.

5. எலுமிச்சம் பழச்சாறில் பனைவெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வர நெஞ்சு எரிச்சல் நீங்கும்.

6. மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு மூன்றையும் அரைத்துப் பூச நகச் சுற்று குணமாகும்.

7. அதிமதிரம், லவங்கம்பட்டை இரண்டையும் தூளாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் கட்டுப்படும்.

8. குழந்தைப் பெற்ற பெண்கள் வெந்தயத்துடன் சிறிது கருப்பட்டி கலந்து களி செய்து சாப்பிட, தாய்ப்பால் அதிகம் ஊறும்.

9. செவ்வாழைப் பழத்துடம் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகினால், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow