எளிதில் செய்யக்கூடிய எக் பராத்தா.

எளிதில் செய்யக்கூடிய  எக் பராத்தா.

தேவையான பொருட்கள் 

கோதுமை - 3/4 கப்
மைதா - கால் கப்
முட்டை - 2
கேரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - பாதி
கொத்தமல்லித் தழை
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

1. மைதா மற்றும் கோதுமை மாவை சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். கேரட்டை   துருவிக் கொள்ளவும். குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்

2. முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அடித்து மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

3. மாவில் பெரிய உருண்டையாக எடுத்து சப்பாத்தியாக தேய்த்து அதன் நடுவில் முட்டை கலவையை பரப்பினாற் போல் வைக்கவும்.

4. சப்பாத்தியின் நான்கு பக்கங்களையும் உள்பக்கமாக மடித்துக் கொள்ளவும்.

5. தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் தடவி செய்து வைத்திருக்கும் பராத்தாவை போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

6. மற்றொரு முறை : பெரிய சப்பாத்தியாக தேய்த்து சப்பாத்தி முழுவதும் முட்டைக் கலவையை தடவவும்.

7. பிறகு அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து மூடி தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். சுவையான எக் பராத்தா தயார். குழந்தைகளுக்கு   பிடித்தமானது எளிதில் செய்துவிடலாம்.