அதிஷ்டம் வரப்போவதை உணர்த்தும் கனவுகள் என்ன கனவு வந்தால் என்ன பலன்?

அதிஷ்டம் வரப்போவதை  உணர்த்தும் கனவுகள் என்ன கனவு வந்தால் என்ன பலன்?

நமது ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய ஒரு விஷயமே உறக்கத்தில் வரும் கனவு. நிச்சயம் உங்களுக்கு வரும் கனவுகளுக்கு ஏதேனும் ஒரு உள்ளார்ந்த அர்த்தங்கள் இருக்கும். இனி உங்கள் வாழ்வில் நடக்க போகும் நல்ல விஷயங்களோ அல்லது தீமை தரக்கூடிய விஷயங்களோ உங்களுக்கு காட்சியாகவோ அல்லது ஓசையாகவோ கனவில் வரும். அவ்வாறு உங்களுக்கு வரும் கனவுகளுக்கு என்னென்ன பலன் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கனவு காணாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். பல தடவை நாம் கண்ட கனவின் அர்த்தம் என்ன என்று அதிக நேரம் யோசித்திருப்போம். ஆனால் காலப்போக்கில் அதனை மறந்து விடுவோம். கனவு என்பது நாம் செய்யும் அல்லது செய்யப்போகும் விஷயங்களை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக வருகின்ற விஷயமாகும். இவ்வாறான கனவுகள் வருவதற்கு நாம் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஆனால் அந்த கனவிற்கு என்ன அர்த்தம்? அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து செயல்பட வேண்டும். கனவுகளை பார்ப்போம் . 

1.கடவுள்கள் உங்களது கனவில் வந்தால் நிச்சயம் உங்களுக்கு கடவுளின் ஆசி இருப்பதாக தெரிந்து கொள்ளலாம். அதிலும் ராஜ அலங்காரத்தில் இருக்கும்     முருகப்பெருமான், பெருமாள், குபேரன், மகாலட்சுமி இவ்வாறான தெய்வங்களை நீங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு பண வரவு வரப்போவது என்பதனையும்   உங்கள் தொழிலில் உங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் சிவபெருமானை கனவில் கண்டால் நீங்கள் ஆன்மீகத்தில்   உயர்ந்த நிலையை அடையப் போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

2.கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் உயர்ந்த நிலையை அடையப் போகிறீர்கள் என்பதனையும், உங்களுக்கு நீங்கள் எதிர்பாராத   வகையில் அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். அதே போல் சீரான மணி ஓசையே உங்கள் கனவில் உணர்ந்தீர்கள் என்றால்   குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க போவதாகவும், உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீர போவதாகவும் அர்த்தமாகும்.

3.கடவுள்கள் உங்களை ஆசீர்வதிப்பது போன்றும் அல்லது நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆசீர்வதிப்பது போன்றும் கனவு வந்தது என்றால் உங்களுக்கு யோகம்   கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாகும். புதிய தொழில் தொடங்குவது, புதிய வேலை கிடைப்பது, பதவி உயர்வு கிடைப்பது, அல்லது அரசாங்க பதவி கிடைப்பது   இது போன்ற சுபகாரியங்கள் உங்களுக்கு நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

4.இறந்து போன நமது முன்னோர்கள் கனவில் வந்தார்கள் என்றால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரப் போகிறது என்பதையும், அதனை முன்னதாகவே   தெரிவிப்பதற்காக அவர்கள் உங்கள் கனவில் தோன்றுவதாகவும் அர்த்தமாகும். இவ்வாறு இறந்து போனவர்கள் உங்களது கனவில் வருவது அவர்கள் எப்போதும்   உங்களுடன் இருந்து உங்களை பாதுகாக்கிறார்கள் என்று அர்த்தமாகும்.

5.சிலருக்கு அவர்கள் இறந்தது போன்ற கனவுகள் தோன்றும். இதனால் அவர்களுக்கு நன்மை தான் நடக்குமே தவிர எந்த ஒரு கெடுதல்களும் இருக்காது. எனவே   பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதே போல் உங்களை சுற்றி இருப்பவர்கள் இறந்தது போன்று கனவு வந்தால் அவர்களுக்கும் இருக்கின்ற பிரச்சினைகள்   தீர்ந்து நல்லபடியாக இருப்பார்கள் என்றே அர்த்தமாகும்.